மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் உள்ள பிபிசி பாலத்திற்கு அருகில் இனந்தெரியாத ஆண் சடலம் ஒன்று நேற்று (29) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மருதானை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் குழுவொன்று சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.