Sunday, July 13, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெண்ணொருவர் படுகொலை

பெண்ணொருவர் படுகொலை

அயகம பிரதேசத்தில் நேற்று (29) இரவு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அயகம – வத்தஇன்னகந்த பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளதாக அயகம பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணும் சந்தேக நபரும் 2016 ஆம் ஆண்டு முதல் திருமணத்துக்கு அப்பாலான உறவை பேணி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் இருவருக்குமிடையில் தொடர்ந்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக குறித்த பெண் பிரதேசத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், அவர் மிண்டும் வீடு திரும்பியபோது, ​​சந்தேக நபர் அவரை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles