இன்று (30) மாலை திட்டமிடப்பட்ட பல அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இயந்திர சாரதிகள், புகையிரத காவலர்கள் பணிக்கு சமூகமளிக்காதமையினால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் இன்று காலையும் மாலையும் சுமார் 12 அலுவலக ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.