இஸ்ரேலில் உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் இறுதிக் கிரியைகள் இன்று (30) பிற்பகல் நடைபெறவுள்ளது.
தற்போது அவரது சடலம் தலுகமவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 7ஆம் திகதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் பின்னர் அனுலா ரத்நாயக்க காணாமல் போயிருந்ததுடன், இராணுவ மோதலின் போது அவர் உயிரிழந்ததாக பின்னர் தெரியவந்துள்ளது.
இஸ்ரேலில் 10 வருடங்களாக பணிபுரிந்த 49 வயதான அனுலா ரத்நாயக்க இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.