Saturday, March 28, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு990 கோடி ரூபா நிதி மோசடி செய்த ஒருவர் கைது

990 கோடி ரூபா நிதி மோசடி செய்த ஒருவர் கைது

இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி நிதி நிறுவனமொன்றை நடத்தி 990 கோடி ரூபா நிதி மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (26) கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக நிதி முறைக்கேடு, நம்பிக்கை துரோகம் மற்றும் பண மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் நிதி நிறுவனத்தின் பணிப்பாளராகவும் பங்குதாரராகவும் பணியாற்றியுள்ளார்.

கண்டி – கெண்டி வியூகார்டன் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles