Wednesday, August 27, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுந்தலம் குளத்தில் உயிரிழந்த நிலையில் மீன்கள்

முந்தலம் குளத்தில் உயிரிழந்த நிலையில் மீன்கள்

கடந்த சில நாட்களாக முந்தலம் குளத்தில் வாழும் மீன்கள் பெருமளவில் இறந்து வருவதாக பிரதேச மீனவ சமூகம் சுட்டிக்காட்டியுள்ளது.

முந்தலம் குளத்தில் இறந்த மீன்களின் சடலங்கள் மிதப்பதாகவும், அதனைச் சுற்றியுள்ள பகுதியில் மிகவும் துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இறந்த மீன்களின் உடல்கள் குளத்தில் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு பரவி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாகியும் பொறுப்புவாய்ந்த சுற்றாடல் அதிகாரசபையில் இருந்து எவரும் வந்து முந்தலம் குளத்தை சுத்தம் செய்யவில்லை என மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதன் காரணமாக தற்போது குளம் ‘மரணக் குளம்’ அல்லது இறந்த குளமாக மாறியுள்ளதாகவும், உப்புச் செறிவு வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த மீன்கள் திடீரென உயிரிழந்தமைக்கான காரணம் தொடர்பில் வனஜீவராசிகள் மற்றும் கால்நடை வள அலுவலகம் மற்றும் கடற்றொழில் வள அதிகார சபையினர் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles