Saturday, March 28, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - இந்திக்க

மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – இந்திக்க

எதிர்காலத்தில் மின் கட்டண குறைப்பு வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை முடக்குவதற்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள் அனைத்தும் தற்போது முறியடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார உற்பத்தி மூலப்பொருட்களை சேகரிப்பது தொடர்பாக அதன் விநியோகஸ்தர்களுடன் சில முடிவுகள் எட்டப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் மின் கட்டண குறைப்பு திட்டத்தை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles