Sunday, October 19, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரான்ஸில் விடுதலையானார் குடு அஞ்சு

பிரான்ஸில் விடுதலையானார் குடு அஞ்சு

பிரான்ஸில் கைதான இலங்கையின் பாதாள உலகக்குழு உறுப்பினரான குடு அஞ்சு என அழைக்கப்படும் சின்ஹாரகே அமல் டி சில்வா, பிரான்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தெஹிவளை – கல்கிசை மாநகர சபை உறுப்பினர் ரஞ்சன் டி சில்வாவின் கொலை, பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டதற்காக அவர் தேடப்பட்டு வந்தார்.

நாட்டில் இருந்து தப்பிச்சென்ற அவர், கடந்த ஏப்ரல் மாதம் பிரான்ஸில் கைது செய்யப்பட்டார்.

வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து போதைப்பொருள் கடத்தல் குழுவை நடத்தி வந்த குடு அஞ்சுவை கைது செய்ய சர்வதேச பொலிஸான இன்டர்போலும் சிவப்பு அறிவிப்பை அனுப்பியிருந்தது.

இதேவேளை, குடு அஞ்சுவின் விடுதலையைக் கொண்டாடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 4 பேரை கல்கிசை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles