Saturday, May 3, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபம்பலப்பிட்டி ரயில் நிலையத்தின் தற்காலிக மேம்பாலம் மக்கள் பாவனைக்கு

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தின் தற்காலிக மேம்பாலம் மக்கள் பாவனைக்கு

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தற்காலிக நடைபயணிகள் மேம்பாலம் இன்று மக்களின் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.

குறித்த ரயில் நிலையத்தின் மேம்பாலம் சேதமடைந்துள்ளமை தொடர்பில் அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.

இதற்கமைய, குறித்த மேம்பாலம் தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பினர் ஆய்வுகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்தநிலையில், புதிய நடைபயணிகள் மேம்பாலம் ஒன்றை நிர்மாணிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்

இதற்கமைய, புதிய மேம்பாலம் அமைக்கப்படும் வரையில் தற்காலிக பாலம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அது இன்றைய தினம் மக்களின் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles