Sunday, October 19, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநெல் களஞ்சியசாலை காப்பாளர்கள் நால்வர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

நெல் களஞ்சியசாலை காப்பாளர்கள் நால்வர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளில் இருந்த நெல் தொகை திருடப்பட்டமை தொடர்பில் நான்கு களஞ்சியசாலை காப்பாளர்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

நிக்கவெரட்டிய, மஹவ மற்றும் ஆனமடுவ ஆகிய பிரதேசங்களில் உள்ள நெல் களஞ்சியசாலைகளின் காப்பாளர்கள் நால்வரே சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட தெரிவித்துள்ளார்.

நெல் களஞ்சியசாலைகளில் இருந்து 700 இலட்சம் ரூபா பெறுமதியான நெல் கையிருப்பு காணாமல் போயுள்ளது என நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மொத்த கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles