நாளை பகுதியளவான சந்திர கிரகணம் ஒன்று தென்படவுள்ளதுடன், இலங்கையர்களும் அதனை அவதானிக்கலாம்.
நாளை இரவு ஆரம்பமாகும் இந்த சந்திர கிரகணம் நாளை மறுதினம் (29) அதிகாலை 4 மணி நேரமும், 25 நிமிடங்களும் நிலவும் என ஆர்த்தர் சீ க்ளார்க் மையம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திரகிரகணம் கிழக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய வலயங்களுக்கு தென்படும்.