Sunday, April 20, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வைத்தியர் ஹர்ஷ குணசேகர தெரிவித்துள்ளார்.

25 வயதுக்கு மேற்பட்டவர்களில் நான்கில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவர் உரையாடும் போது வார்த்தை பிரயோகங்களில் ஏற்படும் தடுமாற்றம் மற்றும் முகத்தின் ஒரு பக்கம் இழுப்பது போன்றன பக்கவாதத்துக்கான அறிகுறிகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய ரீதியில் 6.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பக்கவாதம் காரணமாக உயிரிழப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர்களில் 51 சதவீதமானோர் ஆண்களாவர் இலங்கையில் இரண்டு இலட்சம் பேர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் ஹர்ஷ குணசேகர தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles