Tuesday, July 29, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒன்லைனில் பணம் செலுத்த திட்டம்

உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒன்லைனில் பணம் செலுத்த திட்டம்

அடுத்த வருடம் முதல் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஒன்லைன் முறையின் மூலம் பணம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது பல உள்ளூராட்சி மன்றங்கள் அதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதுடன், மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் உள்ளூராட்சி மன்றங்களின் வரி அறவீடு நடவடிக்கைகள் உள்ளிட்ட கொடுப்பனவுகளை மேற்கொள்வதே இதன் நோக்கமாகும்.

இதன்படி எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள 341 உள்ளூராட்சி நிறுவனங்களிலும் உரிய வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜானக்க வக்கம்புர தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles