அரச புலனாய்வு பிரிவினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, ஹெரோயின் உள்ளிட்ட 200 கிலோவிற்கும் மேற்பட்ட போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த போதைப்பொருள் பலநாள் படகொன்றில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 5 உள்ளூர் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பலநாள் படகு மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.