பங்களாதேஷின் வடகிழக்கு பகுதியில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தலைநகர் டாக்காவில் இருந்து வடகிழக்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஹிராப் பகுதியில் பயணிகள் ரயில் ஒன்று சரக்கு ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தின் போது பயணிகள் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
டாக்கா நோக்கிச் சென்ற அதிவேக ரயில் சட்டோகிராம் நோக்கிச் சென்ற சரக்கு ரயில் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை பங்களாதேஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.