பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்களை முறையாக நடைமுறைப்படுத்துவதில் இலங்கை முன்னணியில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இந்த அர்ப்பணிப்பு இலங்கைக்கு மேலும் ஆதரவளிக்க ஒரு காரணம் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் குறிப்பிடுகின்றார்.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் நேற்று (23) நிதியமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
திட்டமிட்டபடி பெரும்பான்மையான சீர்திருத்த முன்மொழிவுகளை பூர்த்தி செய்ததன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையைப் பெறும் பாதையில் இலங்கை பிரவேசித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.