சீரற்ற காலநிலையால் போதியளவு நீரைப் பெற்றுக்கொடுக்க முடியாத காரணத்தினால் 2023 சிறு போகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதேவேளை சீரற்ற காலநிலையால் சுமார் 58,770 ஏக்கர் நெல் மற்றும் ஏனைய பயிர்கள் சேதமடைந்துள்ளன.
சுமார் 53,965 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு விவசாய அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனையை அமைச்சரவை கவனத்தில் எடுத்தது.
அரசாங்கம் கடினமான நிதி நிலைமையை எதிர்கொண்டுள்ள போதிலும், தற்போதைய பயிர்க் காப்புறுதித் திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான நிதியை ஒதுக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.