Sunday, September 14, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்சார சபையை மறுசீரமைப்பதற்கான பிரேரணைகள் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான பிரேரணைகள் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான பிரேரணைகள் அடுத்த வாரம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் தலைமையில் அது சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு வகையான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

மின்சார சபையின் மறுசீரமைப்புச் செயற்பாட்டின் போது, ​​சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் சபையின் நிதி இருப்புநிலை குறித்த விசேட கலந்துரையாடலும் இணைய முறையின் ஊடாக எடுக்கப்பட்டது.

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அவதானிப்புகள் மற்றும் ஆலோசனைகளின்படி, மின்சார சபையின் நிதி இருப்புநிலையை மறுசீரமைப்பதற்கான மூலோபாய திட்டத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதன்படி, இறுதி முடிவு எதிர்வரும் வாரத்தில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரினால் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles