Tuesday, March 18, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்யும் பொலிஸாருக்கு 5,000 ரூபா கொடுப்பனவு

மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்யும் பொலிஸாருக்கு 5,000 ரூபா கொடுப்பனவு

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் பொலிஸாருக்கு 5,000 ரூபாவை வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இந்த திட்டம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை செயற்படுத்தப்படும்.

இக்காலகட்டத்தில், மதுபோதையில் வாகனம் செலுத்தும் ஒருவரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு அவரது சம்பளத்தில் 5,000 ரூபாவை மேலதிக கொடுப்பனவாக வழங்கவுள்ளதாகவும் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட தெரிவித்தார்.

அதிகாரிகளை ஊக்குவிக்கவும் விபத்துகளைத் தடுக்கவும் இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles