Thursday, April 3, 2025
26.2 C
Colombo
கிழக்குபாக்கு நீரிணையை நீந்திக் கடந்து மட்டக்களப்பு மாணவர்கள் மூவர் சாதனை (Photos)

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து மட்டக்களப்பு மாணவர்கள் மூவர் சாதனை (Photos)

தலைமன்னார் ராமேஸ்வரம் இடையில் உள்ள பாக்கு நீரிணையை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியை சேர்ந்த 3 மாணவர்கள் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளனர்.

இந்த நிகழ்வுக்கான அனுசரணையை மன்னார் ரோட்டரி கழகம் வழங்கியது.

குறித்த சாதனை நிகழ்வு நேற்றைய தினம் (21) மாலை 4. மணி அளவில் நீச்சல் குழுவினர் தனுஷ்கோடி கரைக்குச் சென்று இன்று (22) காலை 3மணியளவில் கடலில் குதித்து நீச்சல் நிகழ்வை ஆரம்பித்து மதியம் ஒரு மணியளவில் தலைமன்னார் கரையை வந்தடைந்தனர் .

குறித்த சாதனையை படைத்த மாணவர்களை மன்னார் ரோட்டரி கழக உறுப்பினர்கள் உட்பட பல கல்வியாளர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

இந்த சாதனை நிகழ்வில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி சாரணர்களின் 150 வருட நிறைவு தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்டது.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும், 15 வயதுக்குட்பட்ட ஒரு மாணவரும் உள்ளடங்குகின்றனர்.

அவர்களுக்கான சான்றிதழ்களை சோழன் ஆசிய சாதனை அமைப்பு வழங்கியிருந்தது.

மேலும் பல அனுசரணையாளர்கள் உடன் மன்னார் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கான இணை அனுசரணை மன்னார் ரோட்டரி கழகம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles