மலையகம்மானை கொன்ற குற்றச்சாட்டில் மூவர் கைது

மானை கொன்ற குற்றச்சாட்டில் மூவர் கைது

தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிந்த மானை கொன்றதாக சந்தேகத்தின் பேரில் தோட்ட தொழிலாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லொனாக் தேயிலை தோட்டத்தில் இறைச்சிக்காக விற்பனை செய்வதற்காக மணல் மானை கொல்லப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தாம் சுற்றிவளைப்பை மேற்கொண்டதில் சந்தேக நபர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் அதே தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles