Monday, September 15, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகிணற்றிலிருந்து தாயும் பிள்ளையும் சடலங்களாக மீட்பு

கிணற்றிலிருந்து தாயும் பிள்ளையும் சடலங்களாக மீட்பு

வாரியபொல – வல்பொல பிரதேசத்தில் உள்ள கிணற்றில் இருந்து 37 வயதான தாய் மற்றும் அவரது 7 வயது குழந்தை ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இருவரின் சடலங்களும் நேற்று (22) இரவு கண்டெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று மதியம் தாயும், குழந்தையும் குளிப்பதற்கு கிணற்றுக்கு சென்ற நிலையில், வீடு திரும்பாததால், உறவினர்கள் அவர்களை தேடியுள்ளனர்.

கிணற்றுக்கு அருகில் நடத்தப்பட்ட தேடுதலின் போது இருவரது உடைகள் மற்றும் காலணிகள் அங்கு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கிணற்றில் இருந்த தண்ணீரை அகற்றி பார்த்தபோது, ​​கிணற்றில் தாயும், குழந்தையும் சடலமாக மீட்கப்பட்டனர்.

சடலங்களை குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் வாரியபொல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles