Friday, April 4, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடத்தப்பட்ட வர்த்தக பெண் காரிலிருந்து குதித்து தப்பினார்

கடத்தப்பட்ட வர்த்தக பெண் காரிலிருந்து குதித்து தப்பினார்

கல்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை இன்று (23) அதிகாலை காரில் கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் பதிவாகியுள்ளது.

கல்பிட்டி, பள்ளிவாசல்துறை பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய வர்த்தக பெண் ஒருவரே சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனமடுவ, வதத்த பிரதேசத்தில் குறித்த காரின் வேகம் குறைந்த போது குறித்த பெண் காரில் இருந்து குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மறைந்திருந்த நிலையில் மேற்படி பெண் பிரதேசவாசிகள் கண்டு பிடிக்கப்பட்டு ஆனமடுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காரில் வந்த நபர்களால் இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கடத்தல் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், இன்று (23) அதிகாலை பெண் கடத்தப்பட்ட காரை ஆனமடுவ பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த கார் பாலாவிய – முந்தலம ஊடாக ஆனமடுவை நோக்கி பயணிப்பதாக கல்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, அதனைக் கைது செய்யுமாறு கல்பிட்டி பொலிஸார் சுற்றியுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்துள்ளனர்.

குறித்த காரை ஆனமடுவ பொலிஸார் மடக்கி பிடித்துள்ளதுடன், அப்போது, ​​காரில் இருந்த ஒருவர் தப்பிச் சென்றுள்ளதுடன், காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில்இ கைது செய்யப்பட்ட நபரையும், பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட பெண்ணையும் மேலதிக விசாரணைகளுக்காக கல்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles