Wednesday, August 6, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிகாரமஹாதேவி பூங்காவுக்கு அருகில் மோட்டார் சைக்கிளொன்று தீக்கிரை

விகாரமஹாதேவி பூங்காவுக்கு அருகில் மோட்டார் சைக்கிளொன்று தீக்கிரை

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையானது.

விகாரமஹாதேவி பூங்காவுக்கு அருகில் இரு இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், அப்போது மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அருகில் இருந்த போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிவதைக் கண்டு கொழும்பு மாநகரசபையின் தீயணைப்புத் திணைக்களத்திற்கு அறிவித்ததையடுத்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்தது.

எனினும் மோட்டார் சைக்கிள் முற்றாக தீக்கிரையாகியிருந்ததாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles