ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலா எத்தோ தலைமையிலான குழுவினர் வவுனியாவிற்கு வருகை தந்திருந்தனர்.
இந்து பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி இடம்பெற்ற இவ் விஜயத்தின் போது வவுனியாவில் உள்ள நான்கு மதத்தவரின் ஆலயங்களிற்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
இதன்போது வவுனியா நகரத்தில் அமையப்பெற்ற கந்தசுவாமி ஆலயத்திற்கு வருகை தந்து ஆலய வழிபாட்டிலும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.