சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லியனகேமுல்ல பிரதேசத்தில் நேற்று (20) மாலை ரயில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் ரயில் கடவையின் ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இவ்விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
லியனகேமுல்ல – சீதுவ பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதியே அவர் உயிரிழந்துள்ளார்.