சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக பொருளாதார நிலையங்களுக்கு வருகை தந்த வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், சந்தையில் எலுமிச்சை அதிக விலைக்கு விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், பொலன்னறுவை மாவட்டத்தின் தியபெதும, கிரிதலே, மெதிரிகிரிய ஆகிய பகுதிகளிலுள்ள விவசாயிகள் தமது எலுமிச்சைஅறுவடையை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.