Thursday, January 16, 2025
25.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை பற்களால் பதம் பார்த்த யுவதி கைது

பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை பற்களால் பதம் பார்த்த யுவதி கைது

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் காலையும், மற்றொரு அதிகாரியின் விரலையும் கடித்த இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பலாங்கொடை பொலிஸில் கடமையாற்றும் பொலிஸாருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கடி காரணமாக இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதுபோதையில் வாகனம் ஓட்டிய இரு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் நேற்று இரவு பொலிஸுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவரின் காதலியே இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை கடித்த குறித்த யுவதி கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் தற்போது பலப்பிட்டிய அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles