Thursday, January 16, 2025
25.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாதல் உறவு முறிவு - இரு குழுக்களுக்கிடையில் தாக்குதல்

காதல் உறவு முறிவு – இரு குழுக்களுக்கிடையில் தாக்குதல்

களுத்துறை, வெட்டுமக்கட பகுதியில் நேற்று (20) இரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தலைக்கவசம் மற்றும் கூரிய ஆயுதங்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை கலமுல்ல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

களுத்துறை வெட்டுமக்கட பிரதேசத்தில் அமைந்துள்ள இரவு உணவகம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காதல் உறவின் அடிப்படையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்கப்பட்டு காயமடைந்த இரு இளைஞர்களில் ஒருவர் பேருவளை மாகல்கந்த பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவருடன் காதல் உறவை பேணியுள்ளார்.

குறித்த இளைஞன் சில காலங்களுக்கு முன்னர் குறித்த உறவை நிறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

களுத்துறை வெட்டுமகட பிரதேசத்தில் உள்ள இரவு உணவகம் ஒன்றில் குறித்த இளைஞனும் மேலும் இரு இளைஞர்களும் உணவு பெற சென்ற போது, ​​குறித்த யுவதியின் தந்தை உட்பட உறவினர்கள் சிறிய லொறி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெற்கு களுத்துறை பொலிஸார் மற்றும் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles