2023ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, அந்த அணி 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களை இழந்து 262 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 70 ஓட்டங்களையும், லோகன் வென் பீக் 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில், இலங்கை அணியின் தில்ஷான் மதுஷங்க 48 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களையும், கசுன் ராஜித்த 50 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இந்தநிலையில், இலங்கை அணி 263 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட தயாராகவுள்ளது.