ஜா- எல – ஏக்கல பகுதியில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
ஜா -எல, ஏக்கல, கொரலெலியவத்த பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய கோஷிலா ரொஷான் என்ற சிறுமியே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 8ம் திகதி காலை 7.30 மணியளவில் மேலதிகவகுப்பில் கலந்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய அவர், 12 நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை என கூறப்படுவதுடன், அவர் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை என அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
கடந்த 8ம் திதகி காலை அவர் வீட்டை விட்டு வெளியே சென்றது வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.