நுரைச்சோலை தேவாலயத்திற்கு முன்பாக உள்ள பாதசாரி கடவையில் நேற்று (19) இரவு இடம்பெற்ற விபத்தில் ஐந்து வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் கெப் ரக வாகனமும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஐந்து வயது குழந்தையே உயிரிழந்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.