Thursday, January 16, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசர்வதேச நாணய நிதியமும், இலங்கையும் ஊழியர் மட்ட உடன்பாட்டை எட்டியது

சர்வதேச நாணய நிதியமும், இலங்கையும் ஊழியர் மட்ட உடன்பாட்டை எட்டியது

IMF ஊழியர்களும் இலங்கை அதிகாரிகளும் 48 மாத EFF-ஆதரவு வேலைத்திட்டத்தின் முதல் மீளாய்வை நிறைவு செய்வதற்காக பொருளாதாரக் கொள்கைகள் குறித்த பணியாளர் அளவிலான உடன்பாட்டை எட்டியுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் மீளாய்வுக்கு அனுமதி கிடைத்தவுடன் இலங்கைக்கு SDR 254 மில்லியன் (சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர்) நிதியுதவி கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் விரிவான கடன் வசதியின் கீழ் இதுவரை வௌியிடப்பட்டுள்ள மொத்த நிதி உதவித் தொகை 660 மில்லியன் டொலர்களாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles