பயாகல – சிங்ககம பிரதேசத்தில் காணி தகராறு காரணமாக ஒருவர் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
பேருவளை – பிங்கென, குருகந்த பிரதேசத்தில் கொஹிலவத்தையைச் சேர்ந்த 65 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் சிங்ககம பேருந்து நிலையத்திற்கு அருகில் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் இரத்தம் வழிந்த நிலையில் வீழ்ந்திருந்த குறித்த நபர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை குற்றத்தடுப்பு புலனாய்வு ஆய்வக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.