காசா நகரில் அமைந்துள்ள கிரேக்க ஆர்த்தடாக்ஸ் செயிண்ட் போர்பிரியஸ் தேவாலயத்தின் மீது இஸ்ரேல் வியாழன் (19) இரவு வான் தாக்குதலை நடத்தியுள்ளது.
நூற்றுக் கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு அடைக்கலம் அளித்து வந்த இந்த தேவாலயம் மீதான தாக்குதலில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிவில் பாதுகாப்பு மீட்பு குழுக்கள் இடிபாடுகளில் இருந்து இறந்த மற்றும் காயமடைந்தவர்களை மீட்கும் நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.
இஸ்ரேலிய விமானத் தாக்குதல் தேவாலயத்தின் முகப்பை சேதப்படுத்தியது.
மேலும் தேவாலயத்திற்கு சொந்தமான ஒரு கட்டிடம் இடிந்து வீழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.