Sunday, December 7, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாழைப்பழத்துண்டு தொண்டையில் சிக்கி வயோதிபர் பலி

வாழைப்பழத்துண்டு தொண்டையில் சிக்கி வயோதிபர் பலி

பன்னிபிட்டிய – ஹிரிபிட்டிய பிரதேசத்தில் வாழைப்பழத்தின் சிறிய துண்டு தொண்டையில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பன்னிபிட்டிய ஹிரிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த கடற்படையின் ஓய்வுபெற்ற தொழில்நுட்ப அதிகாரி ஒருவரே (வயது 64)இவ்வாறு உயிரிழந்தார்.

வாழைப்பழத்தின் சிறிய துண்டு தொண்டையில் சிக்கியதில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நபர் பல வருடங்களாக நோய்வாய்ப்பட்டிருந்ததால் அவரது மனைவி அவரை கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று சாப்பாட்டுக்கு பின் வாழைப்பழத்தை உண்ணும் போது ​​திடீரென பழத்துண்டொன்று தொண்டையில் சிக்கியுள்ளது.

அதனையடுத்து அவருக்கு மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles