ஜப்பானில் இன்று (19) அந்நாட்டு நேரப்படி நண்பகல் 12.51 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 5.0 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்ப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் நஹாவின் கிழக்கு-தென்கிழக்கே சுமார் 83 கிலோமீற்றர் (51 மைல்) தொலைவில் பதிவாகியுள்ளது.
எனினும் இதனால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.