Friday, January 30, 2026
23.9 C
Colombo
செய்திகள்உலகம்காசாவின் ஒரேயொரு புற்றுநோய் மருத்துவமனையும் மூடப்படும் அபாயம்

காசாவின் ஒரேயொரு புற்றுநோய் மருத்துவமனையும் மூடப்படும் அபாயம்

இஸ்ரேல் – பாலஸ்தீன யுத்தம் காரணமாக காசா பகுதியில் அமைந்துள்ள புற்றுநோய் வைத்தியசாலையை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த திங்கட்கிழமை இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் பின்னர், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

தெற்கு காசாவை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளதால், இந்த புற்றுநோய் மருத்துவமனையில் கதிரியக்க சிகிச்சை போன்ற சில சேவைகள் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்தன.

எனினும், இந்த புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சுமார் 9,000 நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு செல்ல வேறு மருத்துவமனை அங்கு இல்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles