கடமைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை தந்தை மற்றும் மகன் ஆகியோர் தாக்கியுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் 3 இல் கடமையாற்றும் களுத்துறை ரெமுனகொட பிரதேசத்தில் வசிக்கும் சார்ஜன்ட் என தெரிவிக்கப்படுகிறது.
களுத்துறை, கல்பொத்த சந்திக்கு அருகில் களுத்துறை ரெமுனாகொட பிரதேசத்தில் வசிக்கும் தந்தை மற்றும் மகன் ஆகியோர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதுடன், அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான சார்ஜன்ட் களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
தலைமையக பொலிஸ் பரிசோதகர் ருவன் விஜேசிங்கவின் பணிப்புரைக்கு அமைய குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.