மழையுடனான வானிலையினால் மகாவலி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 46 வீதம் வரை உயர்வடைந்துள்ளது.
கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 77 வீதம் வரையிலும் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 44 வீதம் வரையிலும் உயர்வடைந்துள்ளதாக இலங்கை மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பெரும்போக பயிர்ச்செய்கைக்காக நீரை விடுவிக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை எதிர்வரும் முதலாம் திகதி நிறைவடையவுள்ளதாக இலங்கை மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
உரிய கால அட்டவணைக்கு அமைவாக பயிர்ச்செய்கையை ஆரம்பிக்குமாறு அதிகாரசபை, விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளது.