Saturday, March 28, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகிருலப்பனையில் துப்பாக்கிச்சூடு

கிருலப்பனையில் துப்பாக்கிச்சூடு

கிருலப்பனை மாவத்தையில் அமைந்துள்ள தனியார் இறப்பர் தொழிற்சாலை ஒன்றின் பிரதான அலுவலகம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிருலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை மற்றும் பிரதான வாயிலுக்கு அருகில் மூன்று வெற்று தோட்டாக்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் பிரதான அலுவலகத்தின் சுவர்கள் சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன்,கிருலப்பனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles