Thursday, January 16, 2025
26 C
Colombo
செய்திகள்உலகம்ஹமாஸ் அமைப்பினரின் பணயக்கைதிகளில் இலங்கையர்களும்

ஹமாஸ் அமைப்பினரின் பணயக்கைதிகளில் இலங்கையர்களும்

ஹமாஸ் குழுவினரால் சுமார் 150 இஸ்ரேலியர்கள் மற்றும் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களும் பணயக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைதுசெய்யப்பட்ட அனைவரினதும் விபரங்களையும் வழங்குமாறு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஹமாஸிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தநிலையில், அவர்களில் இலங்கையர்கள் உட்பட 36 வெளிநாட்டவர்களும் அடங்குவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களின் விபரங்கள் கிடைத்தால், காணாமல் போன இலங்கையர்கள் இருவரைப் பற்றிய தகவலைப் பெற முடியுமென நம்புவதாக தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காஸாவின் வடபகுதியில் வசித்துவந்த 27 இலங்கையர்கள் காஸாவின் தெற்கு பகுதிக்கு பயணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார அறிவித்துள்ளார்

காசா பகுதியில் வசிக்கும் ஏனைய பொதுமக்களுடன் இந்த குழுவினர் ரஃபா எல்லை வழியாக எகிப்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles