இந்தியாவின் பெங்களூரில் கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற தெற்காசிய பயண விருதுகளில் (தெற்காசிய பயண விருது – 2023), தெற்காசிய பிராந்தியத்தில் முன்னணி விமான நிறுவனமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மதிப்பிடப்பட்டுள்ளது.
தெற்காசிய சுற்றுலா விருது வழங்கும் விழா, இந்தத் துறையில் மிகவும் மதிக்கப்படும் விருது வழங்கும் விழாவாகும்.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், பார்வையாளர்கள் தெரிவு பிரிவின் கீழ் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ‘ஆண்டின் சிறந்த விமான சேவையாக’ தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கட்டுநாயக்காவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவுகள், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற தெற்காசிய நாடுகளுக்கு வாராந்தம் 140 விமானங்களை இயக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.