வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து பலரிடம் இருந்து 4.2 மில்லியன் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் பாணந்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபருக்கு எதிராக பாணந்துறை வடக்கு பொலிஸில் ஆறு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர், கெசல்வத்தையைச் சேர்ந்த 46 வயதுடையவர், நேற்று பாணந்துறையில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.