Wednesday, January 15, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வயோதிப பெண் பலி

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வயோதிப பெண் பலி

உடுகல பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் பெண் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் சுகவீனமானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு நேரத்தில் அவர் தங்கியிருந்த அறையில் விளக்குகள் இல்லாததால், பிளாஸ்டிக் நாற்காலியில் மெழுகு தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில, பிளாஸ்டிக் நாற்காலியில் தீப்பிடித்து எரிந்துள்ளதுடன், அந்த பெண் தூங்கிக்கொண்டிருந்த மெத்தையில் பரவி அவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த பெண் உடுகல, அயகம பிரதேசத்தை சேர்ந்த 79 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகளை அயகம பொலிசார் மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles