கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விதித்திருந்த தடையை நீக்கும் முறைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இன்று காலை தனுஷ்கவுக்கு எதிரான தடையை இலங்கை கிரிக்கெட் உத்தியோகபூர்வமாக நீக்கியது.
அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நீதிமன்றம் பாலியல் குற்றச்சாட்டிலிருந்து அவரை முழுமையாக விடுவித்தது.
எனினும், தனுஷ்கவின் நடவடிக்கைக்கு எதிராக இந்நாட்டு நீதிமன்றங்களில் வழக்கு இருப்பதாக விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க சுட்டிக்காடியுள்ளார்.
நீதிமன்றத்திற்கு தெரிவிக்காமல் இலங்கை கிரிக்கெட் விதித்துள்ள தடையை நீக்குவது குறித்து ஒரு தீர்மானத்தை எடுக்க முடியாது.
இலங்கை கிரிக்கெட் சபை யாரிடம் இருந்து சட்ட ஆலோசனை பெறுகிறது என்பது தனக்கு தெரியாது எனவும், கிரிக்கெட் சபைக்கு இந்த நாட்டில் உள்ள சட்டம் தெரியாது எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.