கொழும்பின் பல வீதிகளில் இன்று கடுமையான வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.
நிலவும் சீரற்ற காலநிலையே இதற்கான பிரதான காரணம் என போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடும் மழையால் பல வீதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதனால் பாடசாலை மாணவர்களும், ஊழியர்களும் ஏனைய தரப்பினரும் இன்று காலை பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.