பொரளை காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் தாய் ஒருவர் 6 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்துள்ளார்.
குறித்த தாய் கடந்த 15 ஆம் திகதியன்று 6 ஆண் குழந்தைகளை பிரசவித்ததாக மேற்படி வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
ஆறு சிசுக்களில் ஐந்து பேர் தற்போது வைத்தியசாலையின் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மற்றைய குழந்தையும் கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேயங்கொடை பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவரே இவ்வாறு 6 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.