அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான போர்த் திட்டங்களைத் தெரிவிப்பதே பைடனின் திடீர் விஜயத்தின் நோக்கம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹமாஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் உரிமையும் கடமையும் இஸ்ரேலுக்கு உண்டு என்பதை ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்துவார் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.