Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உலகம்இந்தியாவில் தன் பாலின திருமணத்திற்கு அனுமதி மறுப்பு

இந்தியாவில் தன் பாலின திருமணத்திற்கு அனுமதி மறுப்பு

இந்தியாவில் திருமண சமத்துவம் கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்க இந்திய உச்ச நீதிமன்றம் இன்றைய தீர்ப்பில் மறுத்துவிட்டது.

அத்துடன், தன் பாலினத்தவர் உரிமைகளை நிலைநிறுத்த மத்திய அரசை நாடவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

அதில், நீதிமன்றத்தால் சட்டத்தை உருவாக்க முடியாது. அதே நேரத்தில் சட்டத்தின் சரத்துகளை கையாள முடியும். தன் பாலின விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடக் கூடாது என மத்திய அரசு தனது நிலைப்பாடாகக் கூறியது. 200 ஆண்டுகளுக்கு முன் முன்னோர்களால் ஏற்க முடியாத பல விஷயங்கள் இன்று ஏற்கக் கூடியதாக மாறி இருக்கிறது.

திருமணம் தொடர்பான விவகாரத்தில் புதிய சட்டத்தை உருவாக்க நாடாளுமன்றத்தையோ, சட்டமன்றத்தையோ கட்டாயப்படுத்த முடியாது. சிறப்பு திருமணச் சட்டத்தை அரசியல் சாசனத்திற்கு எதிரானதாக கருதினால் ஒரு முற்போக்கான சட்டத்தை இழக்க நேரிடும். சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் தன் பாலின திருமணங்களுக்கான சட்ட உரிமையை நீதிமன்றங்கள் தானாக சேர்க்க முடியாது.

குழந்தை திருமணங்கள் போன்ற முன்பு ஏற்கப்பட்ட விஷயங்கள் இன்று மறுக்கப்படுகின்றன. தன் பாலின உறவு என்பது நகர்ப்புறத்தைச் சேர்ந்தது என்ற கருத்து ஏற்புடையது அல்ல. சிறப்பு திருமண சட்டத்தை ரத்து செய்தால், நாட்டை சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திற்கு கொண்டு செல்லும். சிறப்பு திருமணச் சட்டத்தில் மாற்றம் தேவையா இல்லையா என்பதை நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.

திருமணம் என்பது நிலையானது, மாறாதது எனக் கூறுவது தவறான விஷயம். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது என்பது ஒருவரின் வாழ்க்கை பாதையைத் தேர்ந்தெடுப்பது போன்றது” என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தன்பாலின தம்பதிகள், குழந்தைகளை ஒன்றாக வளர்க்கும் தன்பாலின தம்பதிகள், LGBTQ+ ஆர்வலர்கள் மற்றும் சில அமைப்புகள் என 21 பேர் இந்திய உச்ச நீதிமன்றத்தில் தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர்.

Keep exploring...

Related Articles